தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காட்டு யானை தாக்கி இருவர் பலி

காட்டு யானை தாக்கி இருவர் பலி

காட்டு யானை தாக்கி இருவர் பலி


ADDED : மார் 09, 2024 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 07:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார் : நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி, மசினகுடி மற்றும் கூடலுார் பகுதியில் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி மாயார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 52. இவர், வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

மசினகுடி வனச்சரகர் பாலாஜி, வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மசினகுடி போலீசார் வழக்கு பதிவு, பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறை சார்பில் இறந்தவர் குடும்பத்திற்கு துணை இயக்குனர் அருண்குமார் முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.

மற்றொருவர் பலி


கூடலுார் தேவர்சோலை தனியார் எஸ்டேட் காவலராக பணியாற்றி வந்தவர் மாதேவ்,50. இவர் நேற்று காலை, 7:30 மணிக்கு தண்ணீர் திறப்பதற்காக, தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்ற போது, காட்டு யானை தாக்கி, படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார். தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், உறவினர்கள், சக தொழிலாளர்கள், 'காவலரை தாக்கி கொன்ற யானையை பிடிக்க வேண்டும்; கிராமத்தை சுற்றி அகழி வெட்ட வேண்டும்,' என, வலியுறுத்தி உடலை வாங்க மறுத்தனர்.

கூடலுார் எம்.எல்.ஏ., போன் ஜெயசீலன், மாவட்ட கூடுதல் எஸ்.பி., சவுந்தரராஜன், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, டி.எஸ்.பி.,கள் வசந்தகுமார், சரவணன், தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், எஸ்டேட் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில்,'யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'என, உறுதி அளிக்கப்பட்டது. உறவினர்கள் உடலை பெற்று கொண்டனர். தொடர்ந்து வனத்துறை சார்பில், முதல் கட்டமாக, இறந்தவர் குடும்பத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us