ADDED : பிப் 06, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் ஆரஞ்ச் குரோவ் -ஹவுசிங் யூனிட் சாலையோர பகுதிகளில் இரு சிறுத்தைகள் உலா வந்ததால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குன்னுாரில் இரவு, 9:30 மணியளவில் ஆரஞ்ச் குரோவ் - ஹவுசிங் யூனிட் சாலையோர பகுதிகளில், இரு சிறுத்தைகள் உலா வந்தது அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலின் பேரில் வனத்துறையினர் வாகனத்தில் இரவில் ஆய்வு மேற்கொண்டனர் வனத்துறையினரின் கண்களில் சிறுத்தைகள் சிக்கவில்லை. எனினும், வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
