/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு வேறு பகுதிகள்: விபத்தில் சிக்கிய கார்கள்
/
இரு வேறு பகுதிகள்: விபத்தில் சிக்கிய கார்கள்
ADDED : பிப் 10, 2025 10:31 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே இரு வேறு இடங்களில் நடந்த விபத்தில் கார்கள் கவிழ்ந்தன.
பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்தவர் சசிதரன்,64. இவர் நேற்று முன்தினம் பந்தலுாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பங்கேற்று விட்டு காரில் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.
அப்போது, கப்பாலா என்ற இடத்தில் சென்றபோது, கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் மோதி, தலைகீழாக கவிழ்ந்தது.
காயம் அடைந்த சசிதரனை அருகில் இருந்தவர்கள், மீட்டு கேரள மாநில தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எருமாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* கோவையில் இருந்து பந்தலுார் அருகே உட்பட்டி பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த சிலர், நேற்று முன்தினம் இரவு பந்தலுார் நோக்கி காரில் பயணித்துள்ளனர். சாலையின் குறுக்கே காட்டு பன்றிகள் வந்ததால், காரில் மோதாமல் இருக்க திருப்பி உள்ளார்.
அப்போது நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில், யாருக்கும் பெரியளவிலான காயங்கள் ஏற்படவில்லை. நேற்று காலை கார் மீட்கப்பட்டது. தேவாலா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,'மலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். சிறய கவன குறைவு ஏற்பட்டதாலும் விபத்து ஏற்படும்,' என்றனர்.