/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் மண் சரிவில் சிக்கிய வடமாநில தொழிலாளி பலி உரிமையாளர் உட்பட இருவர் கைது

ADDED : மார் 14, 2024 02:48 AM

ஊட்டி,:நீலகிரி மாவட்டம், ஊட்டி மரவியல் பூங்கா எதிரே உள்ள பாபுசா லைன் பகுதியில் பெட்டிக்கடை உரிமையாளர் மேத்யூஸ் என்பவர், தனக்கு சொந்தமான, 3 சென்ட் இடத்தில் வீடு மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கட்டுமான பணியில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான், 20, உள்ளிட்ட மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 20 அடி உயரத்தில் இருந்து மண் சரிந்து விழுந்தது. அதில், ரிஷ்வான் இன்னொருவர் புதைந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், இருவரையும் உயிருடன் மீட்டனர். ரிஸ்வானுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து தொடர்பாக, இடத்தில் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கலெக்டர் அருணா கூறும் போது, ''தற்போது, மண் சரிவு ஏற்பட்ட இந்த இடத்திற்கு பொக்லைன் இயந்திரம் இயக்க அனுமதி கேட்டனர். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி என்பதால் அனுமதி கொடுக்கப்படவில்லை,'' என்றார்.