/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் கம்பம் மீது கவிழ்ந்த லாரி: உயிர் தப்பிய இருவர்
/
மின் கம்பம் மீது கவிழ்ந்த லாரி: உயிர் தப்பிய இருவர்
மின் கம்பம் மீது கவிழ்ந்த லாரி: உயிர் தப்பிய இருவர்
மின் கம்பம் மீது கவிழ்ந்த லாரி: உயிர் தப்பிய இருவர்
ADDED : பிப் 12, 2024 09:14 PM

கூடலுார்;முதுமலை- மைசூரு தேசிய நெடுஞ்சாலை கல்லல்லா பாலம் அருகே, லாரி கவிழ்ந்து மின் கம்பம் மீது சாய்ந்த விபத்தில் இருவர் உயிர் தப்பினர்.
கேரளா மாநிலம், திருச்சூரிலிருந்து, 'பிளைவுட்' ஏற்றிய லாரி நேற்று முன்தினம், கர்நாடக மாநிலம் சென்னாபட்டினம் நோக்கி சென்றது. லாரியை, திருச்சூரை சேர்ந்த ஓட்டுனர்கள் கோபி, ஜோஸ் ஆகியோர் மாறி, மாறி ஓட்டி வந்தனர்.
இரவு, 8:00 மணிக்கு, மைசூரு தேசிய நெடுஞ்சாலை, முதுமலை தொரப்பள்ளி வன சோதனை சாவடியை கடந்து கர்நாடகா நோக்கி சென்றது. தெப்பக்காடு கல்லல்லா பாலம் அருகே, வேகத்தடையை கடக்கும்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சாலையோரம் மின் கம்பத்தில் சாய்ந்தது.
அதில், மின்கம்பம் சற்று சாய்ந்தாலும் மின்கம்பிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால், லாரி டிரைவர்கள் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.