/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டின் 'சிமென்ட்' தளம் இடிந்து இருவர் காயம்
/
வீட்டின் 'சிமென்ட்' தளம் இடிந்து இருவர் காயம்
ADDED : ஜன 09, 2024 10:18 PM
குன்னுார்;குன்னுார் பேரட்டி காமராஜ்புரத்தில் வீட்டு கூரையின் 'சிமென்ட்' தளம் சிறியளவில் இடிந்து விழுந்ததால் இருவர் காயமடைந்தனர்.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெலிங்டன் அருகே பேரட்டி காமராஜ்புரம் பகுதியில் ரங்கன் என்பவரின் வீட்டின் கூரையின் சிமென்ட் தளம் சிறியளவில் இடிந்து விழுந்தது.
வீட்டிலிருந்த ராணி,40, காயமடைந்தார். 10 மாத கைகுழந்தைக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து, குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலின் பெயரில், குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் தலைமையில் வருவாய் துறையினர், ஆய்வு செய்து நிவாரண தொகையாக 8,000 ரூபாய் வழங்கினர்.

