/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருட்டு வழக்கில் இருவருக்கு மூன்று ஆண்டு சிறை
/
திருட்டு வழக்கில் இருவருக்கு மூன்று ஆண்டு சிறை
ADDED : ஜூலை 10, 2025 08:38 PM
குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு ஒசட்டி பகுதியில், வீட்டை உடைத்து உள்ளே புகுந்து, குத்துவிளக்கு உட்பட பணத்தை திருடிய இருவருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குன்னுார், அருவங்காடு அருகே ஒசட்டி பகுதியில், கடந்த, 2022ம் ஆண்டில் கீதா என்பவரின் பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து, 60 ஆயிரம் ரூபாய், இரு பித்தளை குத்து விளக்கு, கைகடிகாரம் ஆகியவை திருட்டு போனது. அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஒரே மாதத்தில், வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்த அஜய், 25, ஜோசப் ஆல்வின், 23 ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, குன்னுார் ஜூடிஷியல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் சலாம் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றவாளிகள் இருவருக்கும் தலா, 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.