/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணையில் குளிக்க இறங்கிய இரு மாணவர்கள் மாயம்
/
அணையில் குளிக்க இறங்கிய இரு மாணவர்கள் மாயம்
ADDED : ஜூன் 23, 2025 04:41 AM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் புதுநகரம் பகுதியைச் சேர்ந்த மோகனின் மகன் கார்த்திக் 18, சித்தூர் அணிக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜனின் மகன் விஷ்ணு பிரசாத் 18.
பிளஸ் 2 மாணவர்களான இவர்கள், நண்பர்களுடன் நேற்று மதியம் மீனாட்சிபுரம் அருகே உள்ள கம்பாலத்தறை அணையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அணையில் நண்பர்களுடன் குளிக்க இறங்கிய இவர்கள், தாழ்வான பகுதியில் சிக்கிக் கொண்டு மூழ்கி மாயமாகினர். இதைக்கண்ட நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், நீண்ட நேரம் தேடியும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த சித்தூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அணையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.