/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மைசூரு சாலையில் இரு வாகன விபத்து: இருவர் காயம்: போலீசார் விசாரணை
/
மைசூரு சாலையில் இரு வாகன விபத்து: இருவர் காயம்: போலீசார் விசாரணை
மைசூரு சாலையில் இரு வாகன விபத்து: இருவர் காயம்: போலீசார் விசாரணை
மைசூரு சாலையில் இரு வாகன விபத்து: இருவர் காயம்: போலீசார் விசாரணை
ADDED : ஆக 18, 2025 07:55 PM
கூடலுார்:
முதுமலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி லாரி, சுற்றுலா கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
கர்நாடகாவில் இருந்து, முதுமலை, கூடலுார் வழியாக சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் ஊட்டிக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம், மாலை ஊட்டிக்கு சென்று, கர்நாடகா திரும்பிய, சுற்றுலா கார், முதுமலை அபயராணயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஒருவர் காயமடைந்தார். இருவர் காயம் இன்றி தப்பினர்.
*அதே போன்று, கர்நாடகாவிலிருந்து காய்கறி ஏற்றி கேரளா செல்லும் லாரி, இரவு முதுமலை கார்குடி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், கேரளா மலப்புரத்தை சேர்ந்த ஓட்டுனர் அப்துல் ஜாபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
கவிழ்ந்த லாரியில் இருந்த காய்கறிகள் நேற்று, காலை வேறு லாரிக்கு மாற்றப்பட்டு, மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர்.