ADDED : ஏப் 05, 2026 11:07 PM
ஊட்டி: -நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் ராணுவத்தில், பிரதீப் பட்டேல் வயது 35 என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் ஊட்டி வந்து ஊட்டியில் இருந்து தலைக்குந்தா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல அவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது தலைக் குந்தாவில் இருந்து ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது , இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ் கண்ணாடி உடைந்து விட்டது இருசக்கர வாகனம் பலத்த சேதமடைந்தது. அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஊட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக இந்த விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்தனர்.
