UPDATED : ஆக 10, 2026 05:22 PM
ADDED : ஆக 10, 2026 01:50 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே இரண்டு பள்ளி மாணவிகளை, இரண்டு இளைஞர்கள் அழைத்து சென்று, வேறு ஒரு நண்பர் வீட்டில், பாலியல் தொல்லை கொடுப்பதாக,'சைல்ட் லைன்' நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, தேவாலா மகளிர் காவல்துறை உதவியுடன், விசாரணை மேற்கொண்டதில், தேவாலா பகுதியைச் சேர்ந்த டேவிட்ராஜ்,22, கார்த்திகேயன்,23, இருவரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
