/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை மாத்திரையுடன் வாலிபர்கள் இருவர் கைது
/
போதை மாத்திரையுடன் வாலிபர்கள் இருவர் கைது
ADDED : ஜன 24, 2025 09:43 PM

பாலக்காடு, ; பாலக்காடு அருகே, போதை மாத்திரையுடன் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுறுத்தலின்படி, பட்டாம்பி இன்ஸ்பெக்டர் பத்மராஜன் தலைமையிலான போலீசார், நேற்று காலை பட்டாம்பி- செர்ப்புளச்சேரி சாலையில் கூம்பன்கல்லு என்ற இடத்தில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு நின்று கொண்டிருந்த இருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர். அவர்களிடம், 1.14 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை இருப்பதை கண்டுபிடித்தனர். நடத்திய விசாரணையில், இவர்கள் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ், 34, முகமது அஸ்லம், 19, என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.