/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலிக்கல் பேரூராட்சி கூட்டம்: 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
உலிக்கல் பேரூராட்சி கூட்டம்: 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
உலிக்கல் பேரூராட்சி கூட்டம்: 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
உலிக்கல் பேரூராட்சி கூட்டம்: 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜன 31, 2024 10:19 PM
குன்னுார்: குன்னுார் உலிக்கல் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் பேபி தலைமை வகித்தார். செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன் சிலர்கள் வார்டு பிரச்னைகள் தீர்க்க பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உலிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளமட்டம் சாலை மேம்பாடு செய்ய அரசுக்கு கருத்துரு சமர்ப்பிப்பது; செங்கல்கோம்பை பகுதியில் குடிநீர் குழாய்கள் தேவையை நிறைவேற்றுவது; உலிக்கல் பேரூராட்சி அலுவலகம் முதல் ஆர்செடின் வரை 1.55 கோடி ரூபாய் செலவில் சாலை சீரமைப்பது, 2.34 சென்டுக்கு குறைவாக உள்ள கட்டுமானத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்வதில் உள்ள முரண்பாடுகளை களைவதற்கு அரசுக்கு தெரிவிப்பது, நீலகிரியில் கலெக்டரின் அனுமதி பெற்ற பத்திரிகைகளுக்கு மட்டும் பேரூராட்சியின் விளம்பரம் மற்றும் செலவு தொகை வழங்குவது உள்ளிட்ட, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.