தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரவு நேரத்தில் அனுமதியில்லாத பணி ‘மினி குப்பெட்டா’ இயந்திரம் பறிமுதல்

இரவு நேரத்தில் அனுமதியில்லாத பணி ‘மினி குப்பெட்டா’ இயந்திரம் பறிமுதல்

இரவு நேரத்தில் அனுமதியில்லாத பணி ‘மினி குப்பெட்டா’ இயந்திரம் பறிமுதல்


ADDED : செப் 28, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரியில் இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல், மண்ணை அகற்ற பயன்படுத்தப்பட்ட ‘மினி குப்பெட்டா’ பறிமுதல் செய்யப்பட்டது.

கோத்தகிரி நேரு பூங்கா அருகே, கோத்தர் பழங்குடியின மக்கள் கடைகள் அமைத்து வருகின்றனர்.

அதற்கு, நகராட்சி நிர்வாகம் உட்பட, சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திலையில், இரவு கட்டுமான பணிக்காக, மரங்களின் கிளைகளை வெட்டி, அனுமதி பெறாமல், மினி குப்பெட்டா இயந்திர உதவியுடன், மண் குவியலை அகற்றி, தண்ணீர் வெளியேறும் கால்வாயில் கொட்டப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி தாசில்தார் மகேந்திரகுமார் உத்தரவுபடி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், சம்பவ இடத்திற்கு சென்று இயந்திரத்தை பறிமுதல் செய்து, தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று, குன்னுார் சப்–கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us