/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைக்காத மார்க்கெட் சாலை: வாகனங்கள் சென்றுவர சிரமம்
/
சீரமைக்காத மார்க்கெட் சாலை: வாகனங்கள் சென்றுவர சிரமம்
சீரமைக்காத மார்க்கெட் சாலை: வாகனங்கள் சென்றுவர சிரமம்
சீரமைக்காத மார்க்கெட் சாலை: வாகனங்கள் சென்றுவர சிரமம்
ADDED : ஆக 18, 2025 07:56 PM
கோத்தகிரி
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து, ராம்சந்த் பகுதிக்கு செல்லும் தாலுகா அலுவலகம் சாலையில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், டெலிபோன் எக்சேஞ்ச், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நுாலகம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
தவிர, நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளன. இதனால், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நகரப் பகுதியின் தண்ணீர் தேவைக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. பல நாட்களாகியும், இதுவரை குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வரும் போது, ஒதுங்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக, பள்ளி மாணவர்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழியை முடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.