/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'சனாதனத்துக்கு எதிராக பேசிய எம்.பி.,ராஜா வாக்காளர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார்' மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
/
'சனாதனத்துக்கு எதிராக பேசிய எம்.பி.,ராஜா வாக்காளர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார்' மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
'சனாதனத்துக்கு எதிராக பேசிய எம்.பி.,ராஜா வாக்காளர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார்' மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
'சனாதனத்துக்கு எதிராக பேசிய எம்.பி.,ராஜா வாக்காளர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார்' மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
ADDED : பிப் 05, 2024 01:46 AM

ஊட்டி;''நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, இந்துக்கள், அருந்ததியர் மற்றும் சனாதனத்துக்கு எதிராக பேசி, வாக்காளர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பா.ஜ., இளைஞரணி மாநாடு நடந்தது. மாநாடு கூட்டத்துக்கு பின், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டியில், பா.ஜ., சார்பில் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் மாநாடுகள் வெற்றிகரமாக நடந்தது. பா.ஜ., தேர்தல் பணியை முழுவீச்சில் நடத்தி வருகிறது. குறிப்பாக, பூத் கமிட்டி பணி முடிந்துள்ளது. நமது பிரதமர் மக்களுடன் உரையாற்றும், 'மனதின் குரல்' நிகழ்ச்சியை, நீலகிரி லோக்சபாவுக்கு உட்பட்ட, 1,618 பூத்களில் நிர்வாகிகள் பார்த்துள்ளனர்.
லோக்சபா தொகுதியை, பா.ஜ.,வெல்வது, 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள எம்.பி., மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறியாமல், எம்.பி.,யாக இருந்துள்ளார்.
இந்துக்கள், அருந்ததியர், சனாதனத்துக்கு எதிராக பேசி, வாக்காளர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார். நீலகிரியில், பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற செய்து, மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. எம்.பி., ராஜாவின் மீது மக்களுக்கு உள்ள கோபத்தால், அவர் இந்த தொகுதியில் நிற்காமல் போகவும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்ட, தொண்டர்கள் தெய்வமாக நினைக்கும் தலைவரான எம்.ஜி.ஆர்.,ஐ கேவலமாக பேசியது கண்டிக்கத்தக்கது.
நீலகிரியில், கூடலுார் செக் ஷன்- 17 பிரச்னையில், மக்கள் பாதிக்காத வகையில், பா.ஜ., துணை நிற்கும். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது. 'லோக்சபா தேர்தலில், 400 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும்; மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்,' என, ஒரு காங்., தலைவர் கூறியுள்ளார். அந்த அளவுக்கு பா.ஜ., கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது. 'இண்டியா' கூட்டணி உருப்படாத கூட்டணி என கூறி இருந்தேன். தேர்தல் அறிவிப்பு வரும்வரை கூட தாங்கவில்லை.
இவ்வாறு, முருகன் கூறினார்.
பேட்டியின் போது, மாவட்ட தலைவர் மோகன்ராஜ், முன்னாள் தலைவர் குமரன், பொது செயலாளர்கள் பரமேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

