தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மானியத்துக்கு தனித்துவ அடையாள எண்

மானியத்துக்கு தனித்துவ அடையாள எண்

மானியத்துக்கு தனித்துவ அடையாள எண்


ADDED : நவ 07, 2025 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: விவசாயிகளுக்கான மத்திய அரசின் மானியம் மற்றும் பி.எம். கிசான் தவணை தொகைக்கு, தனித்துவ விவசாய அடையாள எண் பெற, பதிவு செய்ய தோட்டக்கலை அழைப்பு விடுத்துள்ளது.

குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயலட்சுமி வெளியிட்ட அறிக்கை: விவசாயம் தொடர்பான மத்திய அரசின் மானியம் மற்றும் பி.எம்.கிசான் தவணை தொகைக்கு, தனித்துவ விவசாய அடையாள எண் பெறுவது அவசியம்.

இதனை பதிவு செய்ய விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தில் பதிவு செய்யலாம்.

தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதார் மற்றும் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ விவசாய அடை யாள எண் பெறலாம். மானியம் மற்றும் பி.எம்.கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைக்க இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள், சிம்ஸ்பூங்கா அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us