தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் உரிமம் பெறாமல் செயல்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'

 ஊட்டியில் உரிமம் பெறாமல் செயல்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'

 ஊட்டியில் உரிமம் பெறாமல் செயல்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'


ADDED : ஜன 07, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில், அபுபாபாஜி அறக்கட்டளை வளாகத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த அறைகளுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது.

ஊட்டியில் அபுபாபாஜி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறக்கட்டளை கட்டடத்தில், 17 அறைகள் உள்ளன. இவை நகராட்சி வாயிலாக உரிமம் பெறாமல் செயல்பட்டு வருவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டர்.

அப்போது, அங்குள்ள, 17 அறைகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக உரிமம் புதுப்பிக்காமல் செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலர் சிபி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று, அறக்கட்டளை வளாகத்தில் உள்ள, 17 அறைகளுக்கு சீல் வைத்தனர்.

நகராட்சி சுகாதார அலுவலர் சிபி கூறுகையில், ''பெங்களூரை சேர்ந்த பிரகாஷ் விசிஸ்டா என்பவர் உரிமம் பெறாமலும், கட்டடத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து அங்குள்ள, 17 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர் விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us