/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எரியாத ஹைமாஸ் விளக்கு உள்ளூர் மக்களுக்கு சிரமம்
/
எரியாத ஹைமாஸ் விளக்கு உள்ளூர் மக்களுக்கு சிரமம்
ADDED : ஏப் 22, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்,; அருவங்காடு ஜங்ஷன் பகுதியில், ஹைமாஸ் விளக்கு சரிவர எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
குன்னுார் அருகே அருவங்காடு ஜெகதளா ஜங்ஷன் பகுதியில், பேரூராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சரிவர எரியாமல் உள்ளது.
அதில்,  எரியும் ஒரு விளக்கின் வெளிச்சம் போதுமானதாக இல்லை. இருள் சூழ்ந்து காணப்படும் இடத்தில், மதுகடைக்கு வந்து செல்பவர்களால் மகளிர் நடமாட சிரமப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

