/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பு இல்லாத கூட ஹள்ளா தடுப்பணை: வன விலங்குகள் தண்ணீர் பருக சிக்கல்

ADDED : அக் 16, 2025 08:19 PM

கோத்தகிரி: கோத்தகிரி கூடஹள்ளா தடுப்பணை துார் வாரப்படாமல், புதர் மண்டி கிடப்பதால், வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
கோத்தகிரி -சோலுார்மட்டம் இடையே அமைந்துள்ளது, ஒன்னட்டி கூட ஹள்ளா நீர்ப்பிடிப்பு பகுதி. பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் வனத்துறை சார்பில், வன விலங்குகள் வறட்சி நாட்களில் தண்ணீர் பருக ஏதுவாக தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில், விவசாயிகள் கேரட் உள்ளிட்ட விளை பொருள்களை கழுவி, மண்டிகளில் விற்பனை செய்து வந்தனர் . தவிர, இந்த தடுப்பணை, வன விலங்குகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. சமீப காலமாக, தடுப்பணை துார் வாரப்படாத நிலையில், தண்ணீர் வரத்து குறைந்து, விவசாயிகளுக்கும், வனவிலங்குகளுக்கும் பயனில்லாமல் புதர் மண்டி, தடுப்பணை இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் உள்ளது. இது ஒடுப்புறம் இருக்க, கோத்தகிரி நகருக்கு மாற்று தண்ணீர் ஆதாரமாக விளங்கிய இந்த தடுப்பணை தற்போது எவ்வித பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், தடுப்பணையை துார் வாரி பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.