/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைக்காத நடைபாதை கால்வாய் மழை வெள்ளத்தால் பள்ளம்
/
சீரமைக்காத நடைபாதை கால்வாய் மழை வெள்ளத்தால் பள்ளம்
சீரமைக்காத நடைபாதை கால்வாய் மழை வெள்ளத்தால் பள்ளம்
சீரமைக்காத நடைபாதை கால்வாய் மழை வெள்ளத்தால் பள்ளம்
ADDED : மார் 28, 2025 03:35 AM

குன்னுார்: குன்னுாரில் இருந்து மோர்ஸ் கார்டன் செல்லும் நடைபாதையில், மழைநீர் கால்வாயை சீரமைக்காத நகராட்சியால், பள்ளம் ஏற்பட்டு நடைபாதை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னுார் ஓட்டுப்பட்டறை, மவுன்ட் பிளசன்ட், மோர்ஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சலாம் தெரு வழியாக செல்லும் முக்கிய நடைபாதையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். இங்குள்ள பள்ளிக்கு மாணவ, மாணவியர், பெற்றோர் வந்து செல்கின்றனர்.
இந்த நடைபாதை ஓரத்தில் உள்ள, மழை நீர் கால்வாய் சீரமைக்காததால், வெள்ளம் சாலையில் சென்று மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், அடிப்பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு நடைபாதையும் பாதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பள்ளம் ஏற்பட்டுள்ள நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.