/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பு இல்லாத நடைபாதை; சாலையில் நடக்கும் மக்கள்
/
பராமரிப்பு இல்லாத நடைபாதை; சாலையில் நடக்கும் மக்கள்
பராமரிப்பு இல்லாத நடைபாதை; சாலையில் நடக்கும் மக்கள்
பராமரிப்பு இல்லாத நடைபாதை; சாலையில் நடக்கும் மக்கள்
ADDED : ஆக 29, 2025 09:06 PM

ஊட்டி; ஊட்டி படகு இல்லம் நடைபாதை பராமரிப்பு இல்லாமல் காட்டு செடிகள் வளர்ந்து காணப்படுவதால், மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட படகு இல்லம் சாலையில் நாள்தோறும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மத்திய பஸ் நிலையம் முதல், படகு இல்லம் வரை, சுற்றுலா பயணிகள்  நடந்து செல்ல ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடைப்பதை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக நடைபாதை பராமரிக்கப்படாததால், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, நடைபாதையின் அகலம் குறுகியுள்ளது. இதனால், மக்கள் நடைப்பாதையை பயன்படுத்தாமல், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நலன் கருதி, நடைப்பாதையை பராமரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

