/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பில்லாத கழிப்பிடம் நோய்கள் பரவும் அபாயம்
/
பராமரிப்பில்லாத கழிப்பிடம் நோய்கள் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 21, 2025 06:22 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே உப்பட்டி பகுதி, பல்வேறு கிராமங்களில் சந்திப்பு பகுதியாகவும், கடைகள் அமைந்துள்ள பகுதியாகவும் உள்ளது.
இதனால், இந்த பகுதிக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி மூலம், அத்திக்குன்னா செல்லும் சாலையை ஒட்டி கழிப்பிடம் அமைக்கப்பட்டது. முறையாக அதனை பராமரிக்காத நிலையில் தற்போது அந்த கட்டடம் குப்பை கழிவுகள் வைக்கும் இடமாக மாறி உள்ளது.
அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பஜாரின் மையப்பகுதியில், மேலும் ஒரு கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனையும் முறையாக பராமரிக்காத நிலையில், கதவுகள் உடைந்து பாழடைந்து வருகிறது. கழிப்பிடத்தின் உட்பகுதியில் சுத்தம் செய்யாததால், துர்நாற்றம் வீசி வியாபாரிகளுக்கும், இதனை ஒட்டி குடியிருப்பவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இரண்டு கழிப்பிடங்களையும் சீரமைத்து, மக்கள் பயன்படுத்த ஏதுவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.