/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதுகாப்பு இல்லாத அங்கன்வாடி மையம் குழந்தைகள் மீது குடிநீர் தொட்டி விழும் அபாயம்

ADDED : பிப் 14, 2024 01:05 AM

குன்னுார்:கேத்தி- பாலாடா அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டு வருவதால், உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குன்னுார் கேத்தி பாலாடாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அங்கன்வாடி மையத்தில், 13 குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
மிகவும் பழமையான இந்த கட்டடத்தில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குடிநீரும் சரிவர வருவதில்லை. அறைகளுக்குள் பல இடங்களிலும் குழிகள் ஏற்பட்டுள்ளதுடன் எலிகள் வந்து செல்லும் இடமாகவும் மாறியுள்ளது. பாத்திரம் கழுவும் இடத்தில் நீர் வெளியேற குழாய் அமைக்கப்படவில்லை.
இங்கு குடிநீர் தொட்டி வைத்துள்ள பலகைகள் பெயர்ந்து சேதமாகி உள்ளன. மேலும், தொட்டி விழும் அபாய நிலையில் உள்ளது. சில நேரங்களில் குழந்தைகள் இதன் அருகில் சென்று விளையாடுவதால் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
பெற்றோர் கூறுகையில், 'குழந்தை அங்கன்வாடி மையத்தை தற்காலிகமாக வேறு கட்டடத்திற்கு மாற்றி, இந்த மையத்தை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.