ADDED : செப் 11, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் ஜெகதளா சாலையில் குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், குப்பைகளை ஆங்காங்கே வீசாமல் இருக்க வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறபட்டு வருகிறது. அதில், ஜெகதளா பேரூராட்சியில் வீடுகள் தோறும் குப்பை பெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முறையாக குப்பை வாகனம் வராததால் சாலையோர பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இவற்றை நாய்கள், கால்நடைகள் கலைத்து சாலையில் சிதறடிக்கப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தீர்வு காண நடவடிக்கை அவசியம்.
