தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அகற்றப்படாத சிமென்ட் குழாய் கார் மோதி விபத்து

 அகற்றப்படாத சிமென்ட் குழாய் கார் மோதி விபத்து

 அகற்றப்படாத சிமென்ட் குழாய் கார் மோதி விபத்து


ADDED : பிப் 17, 2026 08:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 08:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் டி.டி.கே., சாலையில், வீணாக கிடந்த சிமென்ட் குழாயில் மோதி கார் விபத்துக்குள்ளானது.

குன்னுார் டி.டி.கே., சாலையோரத்தில், ஆக்கிரமிப்புகள் உள்ளதுடன் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. ராணுவ பகுதி, நீதிமன்றம், கால்நடை மருத்துவமனை மற்றும் பள்ளி உள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.

கால்நடை மருத்துவமனை அருகே பிரியும் இடத்தில், சாலையோரத்தில் பெரிய சிமென்ட் குழாய் வைக்கப்பட்டு அகற்றப்படாமல் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை, வளைவு அருகே காட்டெருமை நடந்து சென்ற நிலையில், இவ்வழியாக, குன்னுாரில் இருந்து ராணுவ பகுதிக்கு சென்ற ராணுவ அதிகாரி ஒருவரின் கார் திருப்பிய போது, இந்த சிமென்ட் குழாயில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

சமூக ஆர்வலர் முபாரக் கூறுகையில், ''விபத்து அபாயம் உள்ளதால், பயனற்று கிடக்கும் வாகனங்கள் மற்றும் சாலையோரத்தில் இது போன்று உள்ள பொருட்களை அகற்ற வேண்டும்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us