sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள்; மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

மலை மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள்; மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மலை மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள்; மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மலை மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள்; மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 04, 2025 10:38 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; 'ஊட்டியில் நல திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் மாநில முதல்வர், நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுாரில், லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன்; மக்கள் சேவை மைய நிர்வாகிகள் சார்பில், மாநில முதல்வர்; மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

நீலகிரி மாவட்டத்தில், செயல்படுத்தாத நில உடமை மேம்பாட்டு திட்டத்தை, மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.

l அனைத்து உள்ளாட்சிகளிலும் பழங்குடியின மக்கள் மற்றும் பூர்வ குடிமக்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயை கணக்கில் கொண்டு, பேரூராட்சிகளாக உள்ளதை மாற்றி ஊராட்சியாகவும்; ஊராட்சிகளை சிற்றுராட்சியாகவும் மாற்ற வேண்டும்.

l மாநிலத்தில், முதலில் பஸ்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, நீலகிரியில், 450 அரசு பஸ்கள் இயங்கிய நிலையில், தற்போது 335 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில், ஐகோர்ட் உத்தரவை மீறி பல பஸ்களில் வசூலிக்கும், 'எக்ஸ்பிரஸ்' கட்டணத்தை ரத்து செய்து, அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்க வேண்டும்.

l மாவட்டத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

l மாவட்டத்தில் 110 மினி பஸ்கள் இயங்கும் நிலையில், 25 மினிபஸ் களுக்கு அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கிராமங்களை இணைக்கும் வகையில் இயக்காமல் உள்ள மினி பஸ்களின் உரிமங்கள் ரத்து செய்ய வேண்டும்.

l தமிழகத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் ஒரே விலையில் விற்கப்படும் நிலையில், நீலகிரியில் மட்டும், 'டிலைட்' பால் 5 ரூபாய்; அரை லிட்டர் தயிர், 8 ரூபாய் கூடுதலாகவும், விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.

l தென்னகத்தின் நீர் தொட்டியாக உள்ள நீலகிரி மலையில் பசுமை பாலைவனமாக மாற காரணமாக, உள்ள யூகலிப்டஸ், பைன், அக்கேசசியா போன்ற அன்னிய மரங்களை அகற்றும் உத்தரவை முழுமையாக செயல்படுத்தி,இவற்றை கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு எரிபொருளுக்காக வழங்க வேண்டும்.

l குன்னுாரில் அரசு கல்லுாரி அமைக்கும் முடிவை மாற்றி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில், குந்தா பகுதியில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும்.

l குன்னுார் மவுண்ட் ரோடு, அருவங்காடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் மற்றும் நெடுஞ்சாலை அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us