தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் தீர்க்கப்படாத பிரச்னைகள் பிரதமர், முதல்வரை சந்திக்க முடிவு

 நீலகிரியில் தீர்க்கப்படாத பிரச்னைகள் பிரதமர், முதல்வரை சந்திக்க முடிவு

 நீலகிரியில் தீர்க்கப்படாத பிரச்னைகள் பிரதமர், முதல்வரை சந்திக்க முடிவு


ADDED : ஜன 08, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: 'நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, முதல்வர் மற்றும் பிரதமரை முஸ்லிம் ஜமாத் அமைப்பு நேரில் சந்தித்து வலியுறுத்தும்,' என, தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் ஜமாத் சார்பில், 'மனிதர்களோடு முஸ்லிம் ஜமாத் அன்பு பயணம்,' என்ற தலைப்பில் கர்நாடக மாநிலத்தில் துவங்கியது. தொடர்ந்து, கேரளா மாநிலத்தில், 17 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டத்திற்கு வந்தது.

மாவட்ட எல்லையான சேரம்பாடி பகுதியில், பள்ளிவாசல் கமிட்டி சார்பில் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பந்தலுார் பள்ளிவாசலில், அன்பின் விருந்து வழங்கப்பட்டு அனைத்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முகமது பரூர் வரவேற்றார்.

முஸ்லிம் ஜமாத் கேரளா மாநில செயலாளர் சையது இப்ராஹிம் கலீல் புகாரி பேசுகையில், ''மனிதநேயமிக்க மனிதராக வாழ்ந்தால், நாட்டில் ஜாதி, மதம் மோதல்கள் தவிர்க்கப்பட்டு, அனைவரும் அன்பு நிறைந்த மனிதர்களாக வாழ முடியும். நாட்டில் தீவிரவாதம் முற்றிலுமாக அழிந்து, மனிதனை மனிதன் நேசிக்கும் நிலை வர வேண்டும். அப்போதுதான் அமைதி ஏற்படும்.

கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீலகிரியில், பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாதது, விவசாயம் மற்றும் மனித-- விலங்கு மோதலை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரிடம் அமைப்பு சார்பில் நேரில் வலியுறுத்தி தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகி அனஸ் எடாலத், வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வகுமார், பந்தலுார் முருகன் கோவில் தலைவர் ஹரிராமன், பா.ஜ., நிர்வாகி தீபக்ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us