/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: மக்களுக்கு மருத்துவ பரிசோதனை
/
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: மக்களுக்கு மருத்துவ பரிசோதனை
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: மக்களுக்கு மருத்துவ பரிசோதனை
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: மக்களுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : நவ 05, 2024 08:57 PM

பந்தலுார்; பந்தலுார் பஜாரை ஒட்டி இன்கோ நகர் மற்றும் இந்திரா நகர் ஆகியவை அமைந்துள்ளன.
இந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும், தொட்டியில் பன்றியின் உடல் கிடந்தது.
இதே தண்ணீர் மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தண்ணீரில் விலங்கின் முடி மற்றும் கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து, நகராட்சி மூலம் குடிநீர் தொட்டியை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், பந்தலுார் பஜார் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணற்று பகுதியில் நேற்று பொதுமக்கள் ஆய்வு செய்தனர்.
அங்கு கிணற்றை ஒட்டி அழுகிய நிலையில் விலங்கின் உடல் இருந்ததும், அதிலிருந்து செல்லும் தண்ணீர் கிணற்றில் உள்ள ஓடையில் கலந்து அந்த தண்ணீரை, பந்தலுார் பஜார் பகுதிக்கும் வினியோகம் செய்ததும் தெரியவந்தது.
பொது மக்களின் புகாரை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் முனியப்பன், தலைவர் சிவகாமி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
'கிணற்றை துார்வாரி சுத்தம் செய்து, கழிவு நீர் கிணற்றினுள் கலக்காமல் தடுப்பு ஏற்படுத்த வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தனர்.
இதனையடுத்து, இன்கோநகர், இந்திரா நகர் பகுதிகளுக்கு நகராட்சி லாரி மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன், டாக்டர் அருண் தலைமையில் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.