பயன்படுத்த முடியாத நிழல்குடை நாள்தோறும் பயணிகள் அவதி
பயன்படுத்த முடியாத நிழல்குடை நாள்தோறும் பயணிகள் அவதி
ADDED : செப் 02, 2026 04:10 AM
கூடலுார்: மேல்கூடலுார் அருகே, பரமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நிழல் குடைகளால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேல் கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், ஹெல்த்கேம், கே.கே., நகர், சில்வர் கிளவுட் பகுதிகளில் பயணிகள் காத்திருந்து பஸ் ஏறி செல்ல வசதியாக நிழல் குடைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.
அதில், சில்வர்கிளவுட் அருகே, மூன்று ஆண்டுகளுக்கு முன் வாகன மோதி சேதமடைந்த நிழல்குடை இதுவரை சீரமைக்கவில்லை. கே.கே., நகர் அருகே உள்ள நிழல் குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஹெல்த் கேம் பகுதியில் சேதமடைந்த நிழல்குடை இடிக்கப்பட்டு புதிய நிழல் குடை அமைக்க, அடிதளம் அமைக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது.
இச்சாலையில், உள்ள மூன்று நிழல் குடைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், பயணிகள் தற்போது பெய்து வரும் மழையில், பஸ்சுக்கு காத்திருக்க வசதியின்றி அதிருப்தி அடைந்துள்ளனர்.
பயணிகள் கூறுகையில், ‘இச்சாலையில் பஸ் நிறுத்தும் மூன்று இடங்களில், பயணிகள் காத்திருக்க வசதியாக அமைக்கப்பட்ட நிழல் குடைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இவைகளை அகற்றி புதிய நிழற் குடைகள் அமைக்க வேண்டும்,’ என்றனர்.
