/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'உபாசி' நிர்வாகிகள் தேர்வு: புதிய தலைவர் நியமனம்
/
'உபாசி' நிர்வாகிகள் தேர்வு: புதிய தலைவர் நியமனம்
ADDED : செப் 22, 2025 10:00 PM

குன்னுார்:
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.
குன்னுாரில் செயல்படும் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க, 132வது மாநாடு, இந்த முறை கேரள மாநிலம் கொச்சியில், 8வது இந்திய சர்வதேச தேயிலை மாநாடுடன் சேர்த்து நடத்தப்பட்டது. அதில், நடந்த 'உபாசி' இறுதி பொது கூட்டத்தில், 2025-- 26ம் ஆண்டுக்கான தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, 'உபாசி' பொது செயலாளர் சஞ்சித் கூறுகையில், ''உபாசி தலைவராக, குட்டதமனே மற்றும் கெரேஹக்லு எஸ்டேட் உரிமையாளர் அஜோய் திப்பையா தேர்வு செய்யப்பட்டார். இவர் குடும்பத்தினர், 4வது தலைமுறையாக காபி தோட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக தோட்ட அதிபர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். காபி வாரியம் மற்றும் கர்நாடக மாநில காபி விவசாயிகளின் பிரதிநிதி, உபாசி காபி குழு தலைவர் என பல பதவிகள் வகித்தவர். துணைத் தலைவராக, மாதேசன் போசான்குவெட் எண்டர்பிரைசஸ் தலைவர் அபிஷேக் போடார் தேர்வு செய்யப்பட்டார்,'' என்றார்.