/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உப்பட்டி இடும்பன் கோவில் பெருவிழா கோலாகலம்
/
உப்பட்டி இடும்பன் கோவில் பெருவிழா கோலாகலம்
ADDED : ஜன 29, 2024 11:52 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே உப்பட்டி செந்துார் முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, காவல் தெய்வமாக உள்ள இடும்பன் கோவிலில் புதிய சிலை நிறுவப்பட்டது.
இதன் குடமுழக்கு பெருவிழா, நேற்று காலை சிறப்பு ஹோமத்துடன் துவங்கியது. தியாகராஜ் குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் வேலுசாமி, கருப்பையா, சுந்தர்ராசா குழுவினர் புனித நீர் ஊற்றி குடமுழக்கு நடத்தினர்.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில் வேல், செயலாளர் முருகேசன், பொருளாளர் மோகன்தாஸ் உட்பட பலர் செய்திருந்தனர்.