/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு சங்கத்தின் தந்தை நிக்கல்சன் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்
/
கூட்டுறவு சங்கத்தின் தந்தை நிக்கல்சன் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கத்தின் தந்தை நிக்கல்சன் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கத்தின் தந்தை நிக்கல்சன் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்
ADDED : செப் 20, 2024 09:56 PM

குன்னுார், : 'கூட்டுறவு சங்கத்தின் தந்தை' என, அழைக்கப்படும், பிரடரிக் நிக்கல்சனின், 178வது பிறந்த தினத்தையொட்டி, குன்னுாரில் உள்ள கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்தை முதன் முறையாக நம் நாட்டில் கொண்டு வந்த, ஆங்கிலேயரான பிரடரிக் நிக்கல்சன் கல்லறை குன்னுார் சேனிடோரியம் பகுதியில் உள்ளது.
நிக்கல்சனின், 178 வது பிறந்தநாள் விழா, குன்னுார் அரசு நிக்கல்சன் கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. நிக்கல்சன் கல்லறையை மலர்களால் அலங்கரித்து, மெழுகு வர்த்தி ஏந்தி மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் பேசுகையில், ''கடந்த, 1846ம் ஆண்டு செப். 19ல் பிறந்த நிக்கல்சன், நமது நாட்டின் பல்வேறு இடங்களில் கூட்டுறவு சங்க பணிகளுக்கு அடித்தளம் அமைத்தவர். அவர் இறுதிகாலத்தில் குன்னுாரில் வாழ்ந்தார். அவரின், 178வது ஆண்டு பிறந்த நாள் விழாவில், சமூக மேம்பாடு குறித்து நினைவு கூற கடமைபட்டுள்ளோம்.
நிக்கல்சன் பிறந்த தினத்தை நாடு முழுவதும் அரசு விழாவாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வேண்டும்,'' என்றார்.
குன்னுார் நிக்கல்சன் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர் அந்தோணி பேசினார். ஏற்பாடுகளை குன்னுார் நிக்கல்சன் கூட்டுறவு சங்க மேலாளர் ரவிசந்திரன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.