/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமங்களை இணைக்கும் வகையில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
/
கிராமங்களை இணைக்கும் வகையில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
கிராமங்களை இணைக்கும் வகையில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
கிராமங்களை இணைக்கும் வகையில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 21, 2025 07:52 PM
குன்னுார்; 'நீலகிரியில் பல கிராமங்களை இணைக்கும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் குன்னுார் போக்குவரத்து கிளைகள் சார்பில் அதிகரட்டி கிராமத்திற்கு, 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டும், விடியல் பயணம் திட்டத்தில் இல்லாத நிலையில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் பரிந்துரையின் பேரில், விடியல் பயணமாக மாற்றப்பட்டது.
சேலாஸ் முதல் தாம்பட்டி வரையிலான இடைப்பட்ட கிராம மக்கள் நேரடியாக, ஊட்டி, குன்னுார், வந்து செல்லும் வகையில், கடந்த ஜூலை, 10ம் தேதியில் இருந்து, குன்னுார்- -அதிகரட்டி-ஊட்டி சென்று வரும் வகையில் பயணம் மாற்றப்பட்டதுடன், தொடர்ந்து விடியல் பயணமாக இயக்கப்படுகிறது.
அதிகரட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் மனோகரன் கூறுகையில்,''இந்த பஸ்களில் சின்ன கரும்பாலம், சேலாஸ், கெந்தளா, சன்னிசைடு, கோடேரி, குன்னகம்பை, மணியாபுரம், முட்டி நாடு, அதிகரட்டி, பாலகொலா, நுந்தளா, தாம்பட்டி கிராம லவ்டேல் காந்தி பேட்டை மக்கள் பயனடைகின்றனர்.
விவசாய பணிகளுக்கு செல்லும் மகளிர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, குன்னுார் மற்றும் ஊட்டி அரசு கலை கல்லுாரிக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதே போன்று, நீலகிரியில் பல ஊர்களை இணைக்கும் பஸ்கள் இயக்கப்படுமானால், மக்களுக்கு சேவை கிடைப்பதுடன், போக்குவரத்து கழகத்திற்கும் வருவாய் கிடைக்கும், இது தொடர்பாக, தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது,''என்றார்.

