/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு நிலத்தில் மண் திருட்டு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
/
அரசு நிலத்தில் மண் திருட்டு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
அரசு நிலத்தில் மண் திருட்டு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
அரசு நிலத்தில் மண் திருட்டு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
ADDED : டிச 27, 2025 06:40 AM

பந்தலுார்: பந்தலுார் பஜாரை ஒட்டிய அரசு நிலத்தில், மண் கடத்தி செல்வது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பந்தலுார் பஜார் இரும்புபாலம் செல்லும் சாலையில், அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மேல் பகுதியில் பெந்தகேஸ்தே சபை செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பெந்தகோஸ்தே சபைக்கு செல்வதற்காக, இந்த அரசு நிலத்தில் சாலை அமைக்கும் முயற்சி நடந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருவாய் துறையினர் ஆய்வு செய்து சாலை அமைக்க தடை விதித்தனர். இந்த நிலம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், இந்த நிலத்தை சிலர் விலைக்கு வாங்கியதாக கூறி, இங்குள்ள மேட்டுப்பாங்கான பகுதியில் மண்ணை அகற்றும் வகையில், சிறிய தள்ளு வண்டிகளில் இரவில் மண்ணை கடத்தி செல்கின்றனர். காலப்போக்கில் இந்த பகுதி சமன்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடம் கட்ட வாய்ப்புள்ளது.
மக்கள் கூறுகையில்,'பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து மண் கடத்தலை தடுத்து, அரசு நிலத்தை மீட்க வேண்டும்,' என்றனர்.
தாசில்தார் சிராஜுநிஷா கூறுகையில், ''அரசு நிலத்தில் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் பாதுகாக்கப்படும்,'' என்றார்.

