பயனற்ற சி.சி.டி.வி., கேமரா: குற்றங்களை கண்டுப்பிடிக்க சிக்கல்
பயனற்ற சி.சி.டி.வி., கேமரா: குற்றங்களை கண்டுப்பிடிக்க சிக்கல்
UPDATED : ஜூலை 06, 2026 09:53 PM
ADDED : ஜூலை 06, 2026 09:52 PM

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு சுற்றுவட்டார பகுதிகளில், சி.சி.டி.வி., கேமராக்கள் பயனற்றுள்ளதால், குற்றங்களை கண்டுப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக, மக்கள் கூடும் இடங்கள், கடைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில், காவல்துறை சார்பில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் நெருக்கடி மிகுந்த கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பு மற்றும் பஜார் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோத்தகிரி சாவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டது. இதன் வாயிலாக, பெருமளவில் குற்றங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. நாளடைவில், கேமரா ஒயர்கள் அறுந்தும், தலைக்கீழாக தொங்கியும் பழுதடைந்து பயனற்றுள்ளதால், குற்றங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கேமராக்கள், 24 மணி நேரமும் சிறப்பாக இயங்க, பழுதை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
