/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயனில்லாத கழிப்பிடங்கள்; சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்
/
பயனில்லாத கழிப்பிடங்கள்; சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்
பயனில்லாத கழிப்பிடங்கள்; சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்
பயனில்லாத கழிப்பிடங்கள்; சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்
ADDED : மே 18, 2025 09:59 PM
குன்னுார்; குன்னுார் பர்லியார் முதல், ஊட்டி வரையிலான பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்கள் திறக்க படாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். மலர் கண்காட்சி, 11 நாட்கள் நடக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகின்றனர். அவர்கள் பயன்படுத்த போதிய கழிப்பிடங்கள் இல்லாததால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் பயன்படுத்தும் பர்லியாரில் உள்ள கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன், சுகாதாரம் இல்லை. குன்னுார் 'லெவல் கிராசிங்' இ--டாய்லெட் பராமரிப்பு இல்லாமல் பயனின்றி கிடக்கிறது. சாமன்னா பார்க் அருகே நகராட்சி பல லட்சங்கள் செலவு செய்து கட்டப்பட்ட கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளது.
ஜெகதளா பேரூராட்சி அருவங்காடு பகுதியில் உள்ள கழிப்பிடம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பயணிகள் அவசர நேரங்களில் திறந்த வெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இது குறித்து கலெக்டருக்கு புகார் மனு அனுப்பிய தன்னார்வலர் சஜீவன் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை உள்ளதாலும், கழிப்பிடங்கள் பயனில்லாமல் உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், மூடப்பட்டு காணப்படும் கழிப்பிடங்களை உடனடியாக பொதுமக்கள் பயன்பட்டிற்கு திறந்து விட வேண்டும்,'' என்றார்.