/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழிவின் விளிம்பில் வல்லாரைக் கீரை; பாதுகாப்பது அவசியம்
/
அழிவின் விளிம்பில் வல்லாரைக் கீரை; பாதுகாப்பது அவசியம்
அழிவின் விளிம்பில் வல்லாரைக் கீரை; பாதுகாப்பது அவசியம்
அழிவின் விளிம்பில் வல்லாரைக் கீரை; பாதுகாப்பது அவசியம்
ADDED : அக் 31, 2025 11:54 PM

கூடலூர்: கூடலூரில், அழியும் நிலையில் உள்ள நினைவாற்றலை அதிகரிக்க கூடிய வல்லாரைச் செடிகளை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாம் உணவோடு பயன்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்ட கீரைகளை பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கவும், கட்டுப்படுத்தும் மருந்தாகவும் உள்ளது. இதில், நினைவாற்றலை அதிகரிக்க கூடிய வல்லாரைக்கீரை, முக்கியமானது.
இந்த கீரை குறிப்பிட்ட சில பகுதிகளில் இயற்கையாகவே வளரக்கூடியது. நீலகிரி மாவட்டம், கூட லூர் பகுதியில் உள்ள வயல்கள், விவசாய தோட்டங்களில், களைச் செடிகள் போன்று, இயற்கையாக விளைந்தது. இதனைப் பறித்து விற்பனை செய்து, கூடுதல் வருவாய் ஈட்டி வந்தனர். இந்தக் கீரை நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால், மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், விவசாய பயிர்களை பாதுகாத்து அதிகம் விளைச்சல் பெற ரசாயன மருந்துகள் பயன்பாடுகள் அதிகரித்ததால், விவசாயத் தோட்டங்களில் வல்லாரை கீரைகள் பெருமளவு அழிந்துவிட்டது. இதனை, தேடி கண்டுபிடித்து சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை அழிவிலிருந்து பாதுகாக்க, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் முற்றிலும் அழியும் ஆபத்து உள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில், 'பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட வல்லாரைக் கீரை கூடலூர் பகுதி விவ சாயத் தோட்டங்களில் களைச்செடிகள் போன்று, வளர்ந்து காணப்படும். விவசாய தோட்டங்களில் ரசாயன மருந்துகள், உரங்கள் பயன்பாடு அதிகரித்ததால், வல்லாரைக் கீரை பெருமளவில் அழிந்துவிட்டது. கடைகளில் கூட கிடைப்பதில்லை. இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள், வல்லாரை உற்பத்தி செய்து, விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது' என்றனர்.
சித்த மருத்துவர்கள் கூறுகையில், 'வல்லாரைக்கீரையில், இரும்புச்சத்து வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ரத்த அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைத்து, நினைவாற்றலையும் அதிகரிக்கும். கூடலூர் போன்ற சில பகுதிகளில் மட்டும் வளரக்கூடியவை. எனவே, இதனை அழிவிலிருந்து பாதுகாக்க, தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 'வேண்டும்' என்றனர்.

