/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டம்பட்டியில் நாளை வள்ளி கும்மி அரங்கேற்றம்
/
காட்டம்பட்டியில் நாளை வள்ளி கும்மி அரங்கேற்றம்
ADDED : பிப் 16, 2024 12:07 AM
அன்னுார்:முதலிபாளையத்தில், நாளை (17ம் தேதி) வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் நடக்கிறது.
காட்டம்பட்டி அருகே முதலிபாளையம், மாகாளியம்மன் கோவில் வளாகத்தில், நாளை (17ம் தேதி) மாலை 5:30 மணிக்கு வள்ளி முருகன் கலைக்குழுவின் கும்மியாட்டம் அரங்கேற்றம் நடக்கிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகிக்கிறார். காட்டம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கும்மி ஆட்டம் பயிற்சி பெற்ற இளைஞர்கள், பெண்கள் அரங்கேற்றத்தில் பங்கேற்கின்றனர். வள்ளி முருகன் கலைக்குழுவின் 38 வது அரங்கேற்றம் இது.
நாட்டுப்புற பாடல்கள் உடன் மூன்று மணி நேரம் நடைபெறும் கும்மியாட்டத்தை கண்டு ரசிக்க பொது மக்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.