/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாழை தோட்டம் பள்ளியில் வன மகா உற்சவ வார விழா
/
வாழை தோட்டம் பள்ளியில் வன மகா உற்சவ வார விழா
ADDED : ஜூலை 10, 2025 08:39 PM

கூடலுார்; மசினகுடி வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் வன மகா உற்சவ வார விழா நடந்தது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொண்டால், வருங்கால சமுதாயம் வளமாக இருக்கும்,'' என்றார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ''எதிர்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு, காடுகளையும் அவை சார்ந்த மரங்களை பாதுகாப்பதுடன், நாம் வசிப்பிடங்களை ஒட்டி மரங்கள், மூலிகை செடிகள் வளர்ப்பது எதிர்கால சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும். இயற்கையோடு ஒட்டி வாழ்வதன் மூலம் நாம் நோயற்ற வாழ்வை வாழ முடியும்,'' என்றார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. விழாவில், உதவி தலைமை ஆசிரியர் நந்தினி, ஆசிரியரியர்கள் சந்திரபாபு, அனில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் வித்யா நன்றி கூறினர்.