/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீரமங்கையரின் 'வீரகாசே' நடனம்: பக்தர்கள் பரவசம்
/
வீரமங்கையரின் 'வீரகாசே' நடனம்: பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 08, 2025 09:37 PM

குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், வீரமங்கையரின் 'வீரகாசே' நடனம், பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டின் சித்திரை தேர் திருவிழா கடந்த, 4ம் தேதி துவங்கியது.
அதில், கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில் நடந்த விழாவில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடன குழுவினரின், 'பூஜா குனுத்தா, வீரபத்ர குனுத்தா'எனப்படும் பக்தி நடன நிகழ்ச்சிகள் நடந்தது. அதில், எலுமிச்சையை வீசி, வாளில் வெட்டும் நிகழ்வு அனைவரையும் ஈர்த்தது.
இதே போல, 'வீரகாசே' எனப்படும் பக்தி நடனத்தில் சூலாயுதம், கத்திகளுடன் மகளிர் நடனம் ஆடினர். அதில், சிவன் வேடம் அணிந்த வீர மங்கை நாக்கில் கற்பூரம் ஏற்றியும், சூலாயுதம் சுற்றியும், பக்தி பரவசத்துடன் நடனம் ஆடியது அங்குள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
தொடர்ந்து, தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழா ஊர்வலத்தில் நடக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.