தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓணம் பண்டிகை எதிரொலி காய்கறி , பூக்கள் விலை உயர்வு

ஓணம் பண்டிகை எதிரொலி காய்கறி , பூக்கள் விலை உயர்வு

ஓணம் பண்டிகை எதிரொலி காய்கறி , பூக்கள் விலை உயர்வு


ADDED : ஆக 25, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஓணம் பண்டிகையை ஒட்டி காய்கறி, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

நீலகிரியில் பல்வேறு பகுதிகளில், கேரளா மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஓணம் பண்டிகை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி ஏராளமான மக்கள் காய்கறிகள் வாங்க உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டில் குவிந்தனர். வழக்கத்தை காட்டிலும் காய்கறிகள் விலை சற்று அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக , பயிறு கிலோ, 100 ரூபாய்; கொத்தவரங்காய், 80; கேரட், 60; பீன்ஸ், 120; முருங்கை, 60; புடலை, 80; வெண்டைக்காய், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதைப்போல் , பூக்களின் விலை சாதாரணமாக , 20 முதல் 50 ரூபாய் வரை ஒரு முழம் மல்லிகை பூ விற்பனை செய்யப்படும் ஆனால் நேற்று, 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. முல்லை, 100 ரூபாய், செண்டு மல்லி, 150; சம்மங்கி, 400; அரளி, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழை இலை மற்றும் பழங்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. எனினும், பண்டிகை என்பதால் விற்பனையும் சூடு பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us