/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு அருகே வாகன விபத்து; தப்பிய 32 ஐயப்ப பக்தர்கள்
/
வயநாடு அருகே வாகன விபத்து; தப்பிய 32 ஐயப்ப பக்தர்கள்
வயநாடு அருகே வாகன விபத்து; தப்பிய 32 ஐயப்ப பக்தர்கள்
வயநாடு அருகே வாகன விபத்து; தப்பிய 32 ஐயப்ப பக்தர்கள்
ADDED : நவ 19, 2024 11:39 PM

பந்தலுார்; சபரிமலை சென்று திரும்பிய, கர்நாடக மாநில ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனம், வயநாடு பகுதியில் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதி சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், 32 பேர் சபரிமலை சென்று விட்டு, கேரளா மாநிலம் மானந்தவாடி, திருநெல்லி வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை திருநெல்லி பகுதியில் சாலையில் சென்ற பஸ் திடீரென கவிழ்ந்தது.
அதில், பஸ்சில் பயணம் செய்த, 32 ஐயப்ப பக்தர்களும், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைவரையும் மீட்ட போலீசார் மற்றும் மக்கள் மானந்தவாடி, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, கிரேன் உதவியுடன் பஸ் அகற்றப்பட்டபின் போக்குவரத்து சீரானது. விசாரணை நடந்து வருகிறது.