/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் வாகன விபத்து: மூவர் படுகாயம்
/
மலை பாதையில் வாகன விபத்து: மூவர் படுகாயம்
ADDED : ஏப் 14, 2025 09:54 PM
குன்னுார், ; குன்னுார் மலைபாதையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சேலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் மனைவி மல்லிகா, மருமகள் சந்தியா, பேரன்கள் இருவருடன் கோவையில் உறவினர் விட்டுக்கு ஜீப்பில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.
கே.என்.ஆர்., அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்பு சுவரில் மோதி நின்றது. அதில், மூவருக்கு காயம் ஏற்பட்டது.
அவ்வழியாக வந்த வனத்துறையினர், ஹைவே பேட்ரோல் போலீசார் மீட்டு குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், மல்லிகா கோவை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். விபத்து காரணம் குறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.