ADDED : செப் 16, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளி பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. கல்லார் பண்ணை அருகே வன சோதனை சாவடிக்காக, வைக்கப்பட்ட 'பேரிகாட்'கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
'தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு சிறிய வாகனங்களில் வருபவர்களுக்கு,கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை,' என, டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், அவ்வப்போது, டிரைவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, அதிகளவில் வைத்துள்ள பேரிகாட்களை அகற்றி, விபத்து நடக்காத வகையில் வைக்க வேண்டும்.