/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகன விபத்து; குழந்தை பலி: லாரி செல்ல வழி விட்டதால் விபரீதம்
/
வாகன விபத்து; குழந்தை பலி: லாரி செல்ல வழி விட்டதால் விபரீதம்
வாகன விபத்து; குழந்தை பலி: லாரி செல்ல வழி விட்டதால் விபரீதம்
வாகன விபத்து; குழந்தை பலி: லாரி செல்ல வழி விட்டதால் விபரீதம்
ADDED : பிப் 17, 2024 12:18 AM
ஊட்டி;ஊட்டி அருகே லாரி செல்ல வழி விட்ட போது, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூடலுார் பகுதியை சேர்ந்தவர் அனீஸ், 34, இவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மரிய அனாமிகா, 4, மரிய அவந்திகா, 2, என 2 குழந்தைகள் உள்ளனர். அனீஸ் ஊட்டி- கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஊட்டி அடுத்த மஞ்சனைக்கொரையில் உள்ள தனது மனைவியின் தாயார் வீட்டுக்கு, அனீஸ் தனது குடும்பத்துடன் சென்று விட்டு மொபட்டில் திரும்பி கொண்டிருந்தார். மஞ்சனக்கொரை அருகே எதிரில் லாரி வந்தபோது, லாரிக்கு வழிவிட முயற்சித்த போது, நிலை தடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அனீஸ் உட்பட, 4 பேரும் சாலையில் விழுந்தனர். அதில், 2 வயது குழந்தை மரிய அவந்திகா தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.