/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு வேறு இடத்தில் வாகன விபத்து; கோத்தகிரியில் 12 பேர் படுகாயம்
/
இரு வேறு இடத்தில் வாகன விபத்து; கோத்தகிரியில் 12 பேர் படுகாயம்
இரு வேறு இடத்தில் வாகன விபத்து; கோத்தகிரியில் 12 பேர் படுகாயம்
இரு வேறு இடத்தில் வாகன விபத்து; கோத்தகிரியில் 12 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 24, 2025 09:35 PM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, ஜீப் விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட, 9 பேர் காயம் அடைந்தனர்.
கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சி, ஆடத்தொரை சிம்மக்கல் பகுதியில், வேலை நிமித்தமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் வாகனம் சென்று கொண்டிருந்தது. கோத்தகிரி அரவேனு கைத்தளா தொகுதியை சேர்ந்த சிவராமன்,45, வாகனத்தை இயக்கி சென்றார்.
அப்போது, சாலையில் பின்பக்கமாக ஜீப்பை இயக்கிய போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், கவிதா,28, ராணி,60, ஜோதிமணி,45, ஜெனிபர்,48, ஜமுனா,31, தங்கமணி,38, சுதாகரன்,23 மற்றும் கவிராஜ், 24 ஆகிய, 9 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த கவிதா, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இதேபோல, நேற்று முன்தினம் இரவு, கக்குச்சி பஜாரில் நின்று கொண்டிருந்த, 3 பெண்கள் மீது கார் மோதியதில், அவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.