/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெலா கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய வாகனம்
/
நெலா கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய வாகனம்
ADDED : ஏப் 03, 2025 08:32 PM

பந்தலுார்:
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில் நடந்த விபத்தில் ஜீப் ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் இருந்து பாட்டவயல், நெலாக்கோட்டை வழியாக கூடலுார் பகுதிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
பஸ்சை டிரைவர் ரமேஷ் இயக்கிய நிலையில், நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை என்ற இடத்தில் எதிரே வந்த பள்ளி வாகனத்திற்கு, இடம் கொடுப்பதற்காக நிறுத்திய போது, பின்னால் வேகமாக வந்த டாக்சி ஜீப் பஸ்சின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
அதில், ஜீப் டிரைவர் ஷாஜி,48, என்பவருக்கு உதடு மற்றும் முகத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டது. ஜீப்பில் பயணித்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

