/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான நெடுஞ்சாலை; விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
சேதமான நெடுஞ்சாலை; விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : ஜூலை 17, 2025 09:22 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தமிழக எல்லை பகுதியில் பாட்டவயல் அமைந்துள்ளது. இங்கிருந்து மற்றொரு எல்லை பகுதியான, நம்பியார்குன்னு மற்றும் அய்யன்கொல்லி,கொளப்பள்ளி பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை வெள்ளேரி வழியாக செல்கிறது.
இந்த சாலையில் உள்ளூர் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தவிர, கேரளா மாநில வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன.
மேலும், பள்ளி வாகனங்களும் அதிக அளவில் சென்று வரும் நிலையில், வெள்ளேரி பகுதியில் சாலை முழுமையாக சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குழிகளாக மாறி உள்ளது. இதனால், இந்த வழியாக வந்து செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் சேதமடைந்து நடுவழியில் நிற்பது வாடிக்கையாக மாறி உள்ளது. அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் அருகே கேரள மாநிலத்தை நோக்கி ஆறு செல்வதால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் பெரும் சேதத்தை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.