/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த இடுக்கரை சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம்
/
சேதமடைந்த இடுக்கரை சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம்
சேதமடைந்த இடுக்கரை சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம்
சேதமடைந்த இடுக்கரை சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம்
ADDED : ஜூலை 11, 2025 11:14 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி இடுக்கரை சாலை சேதம் அடைந்துள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, இடுக்கரை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராம வழியாக, பழங்குடியினர் மக்கள் வசிக்கும் அணில்காடு மற்றும் இடுக்கரை காலனி பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கோத்தகிரியில் இருந்து அரசு பஸ் உட்பட தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் பிரதான இச்சாலையை பயன்படுத்தி வரும் நிலையில், சாலையில் பெரும்பாலான இடங்களில் குழிகள் ஏற்பட்டு, சேதமடைந்துள்ளது. தவிர, தனியார் எஸ்டேட் மற்றும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சாலையின், இருபுறங்களிலும் காட்டு செடிகள் ஆக்கிரமித்து, சாலையில் அகலம் குறைந்து உள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம், சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.